காலியாக உள்ள தலைவர் பதவிக்கு 9-ந் தேதி தேர்தல்

நெம்பர் 10 முத்தூர் ஊராட்சியில் காலியாக உள்ள தலைவர் பதவிக்கு 9-ந் தேதி தேர்தல்

Update: 2022-06-19 14:30 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவி காலியாக உள்ளது. இதேபோன்று நல்லட்டிபாளையம் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர், குருநல்லிபாளையம் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர், சொக்கனூர் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் ஆகிய பதவி காலியாக இருக்கிறது. இந்த பதவிகளுக்கு அடுத்த மாதம்(ஜூலை) 9-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதற்கு நாளை(திங்கட்கிழமை) முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம். இதேபோன்று காலியாக உள்ள மற்ற ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு அந்தந்த ஊராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம். காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படும். இந்த தகவலை தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்