பள்ளி திறந்த முதல் நாளில் 9-ம் வகுப்பு மாணவர் தற்கொலை: கரூரில் சோகம்

9-ம் வகுப்பு முழுத்தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவர் மனமுடைந்து காணப்பட்டார்.;

Update:2024-06-11 06:55 IST

கரூர்,

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கருங்கலாப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் மகேந்திரன் (வயது 16). இவர் கோமாளி பாறையில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் 9-ம் வகுப்பு முழுத்தேர்வு முடிவில் தேர்ச்சி ஆகாமல் தோல்வி அடைந்துள்ளார். இதனால் மகேந்திரன் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் பள்ளி திறப்பு நாளான நேற்று பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த மகேந்திரன், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சங்கர் கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்