ஆன்லைனில் இழந்த பணத்தில் 98 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு

ஆன்லைனில் இழந்த பணத்தில் 98 ஆயிரத்து 785-ஐ மீட்டு உரியவரிடம் சைபர் கிரைம் போலீசார் மூலம் போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே ஒப்படைத்தார்.

Update: 2022-08-27 18:44 GMT

ஆன்லைனில்...

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர் சாகுல்அமீது. இவரது செல்போன் எண்ணிற்கு வந்த குறுஞ்செய்தியை பார்த்து அதில் வந்த லிங்கில் தனது விவரங்களை பூர்த்தி செய்து ரகசிய குறியீடு எண்ணையும் பதிவு செய்தார். இதையடுத்து மர்ம ஆசாமிகள் இவரது வங்கி கணக்கில் இருந்து ஆன்லைனில் 2 தவணைகளாக மொத்தம் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 617-ஐ எடுத்துவிட்டனர். இதனைகண்டு அதிர்ச்சி அடைந்த சாகுல் அமீது தமிழ்நாடு காவல்துறை உதவி எண் 1930-ஐ தொடர்புகொண்டு புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின்பேரில் சைபர் கிரைம் போலீசார் துரித நடவடிக்கை எடுத்தனர்.

உரியவரிடம் ஒப்படைப்பு

சம்பந்தப்பட்ட வங்கி கணக்கில் இருந்து பரிமாற்றம் செய்யப்பட்டதை தடுத்து நிறுத்தினர். இதில் சாகுல்அமீது இழந்த பணத்தில் ரூ.98 ஆயிரத்து 785-ஐ மீட்டனர். மேலும் அதற்கான ஆணையை அவரிடம் போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே ஒப்படைத்தார். மேலும் துரிதமாக செயல்பட்ட சைபர் கிரைம் போலீசாரை அவர் பாராட்டினார்.

மேலும் இது போன்ற பணமிழப்பு சம்பந்தமான சைபர் கிரைம் குற்றங்களுக்கு உடனடியாக தமிழ்நாடு காவல்துறை உதவிஎண் 1930-ஐ தொடர்புகொள்ளலாம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்