சென்னையில் ஒரே நாளில் 9.16 கோடி யூனிட்கள் மின்சாரம் பயன்பாடு: அமைச்சர் தகவல்

சென்னையில் நேற்று 9.16 கோடி யூனிட்கள் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-09 03:46 GMT

சென்னை,

சென்னையில் முதன்முறையாக நேற்று ஒரு நாளில் 9.16 கோடி யூனிட்கள் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தனது டுவீட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது;

முதன்முறையாக சென்னையில் நேற்று (08/06/2023) 9.16 கோடி யூனிட்கள் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன் 02/06/2023 அன்று 9.06 கோடி யூனிட்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது..

சென்னையின் நேற்றைய மின் தேவை 3872 மெகாவாட் ஆகும். அது எவ்வித தடங்களுமின்றி பூர்த்தி செய்யப்பட்டது.. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்