இந்தி தேர்வை 909 பேர் எழுதினார்கள்

வேலூரில் நடந்த இந்தி தேர்வை 909 பேர் எழுதினார்கள்.;

Update:2023-02-19 23:33 IST

தமிழ்நாடு தட்சிண பாரத இந்தி பிரசார சபா சார்பில் இந்தி தேர்வு வேலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 980 பேர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். அவர்கள் வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காலை 8 மணி முதல் தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு வரத் தொடங்கினர். அவர்கள் பலத்த சோதனைக்கு பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பிராதமிக், மத்யமா, ராஷ்டிரபாஷா ஆகிய பிரிவுகளில் நடந்த இந்த தேர்வை 909 பேர் எழுதினார்கள். 71 பேர் பங்கேற்கவில்லை.

தேர்வை கண்காணிக்கும் பணியில் முதன்மை கண்காணிப்பாளர், தேர்வுமைய, அறை கண்காணிப்பாளர்கள் என்று 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டிருந்தனர். தேர்வு மையத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்