மின் இணைப்புடன் 90 ஆயிரம் பேர் ஆதாரை இணைப்பு

மாவட்டத்தில் மின் இணைப்புடன் 90 ஆயிரம் பேர் ஆதாரை இணைத்துள்ளனர்.;

Update:2022-11-30 00:09 IST

சொந்த வீடு எத்தனை பேருக்கு உள்ளது, வாடகை வீடு எத்தனை பேருக்கு உள்ளது, ஒருவர் பெயரில் எத்தனை மின் இணைப்புகள் இருக்கிறது இதுபோன்ற தகவல்களை தெரிந்து கொள்வதற்காக, ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

ஆதாருடன் இணைப்பு

மக்கள் சிரமத்தை குறைக்கும் வகையில் டிசம்பர் 31-ந் தேதி வரை கால அவகாசத்ைத தமிழக அரசு வழங்கி உள்ளது. எனினும் ஆதார் எண்ணை இணைக்க இ-சேவை மையங்களுக்கும், மின்வாரிய அலுவலகங்களுக்கும் பொதுமக்கள் படையெடுக்கும் நிலையே தொடர்கிறது. வீடுகள், விவசாயம், கைத்தறி மற்றும் விசைத்தறி ஆகியவற்றிற்கான இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது.

மேலும் வீட்டு உரிமையாளர்கள் தங்கள் பெயரில் உள்ள மின் இணைப்பையும் வாடகைதாரர்கள் தாங்கள் குடியிருக்கும் வீட்டின் மின் இணைப்பு எண்ணை தங்கள் செல்போன் எண்ணுடன் இணைத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடைமுறை எளிது

விருதுநகர் மாவட்டத்தில் அரசு அறிவித்ததில் இருந்து நேற்று வரை 90 ஆயிரம் பேர் மின் இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தநிலையில் மின்வாரியம் நேற்று முதல் மின்இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கும் நடைமுறையை எளிதாக்கி உள்ளது. தொடக்கத்தில் ஒ.டி.பி. எண் வந்த பின்பு தான் மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க முடியும் என்ற நிலை இருந்தது. இதனால் சேவை மையங்களிலும், மின்வாரிய அலுவலங்களிலும் மிகுந்த காலதாமதம் ஆகும் நிலை ஏற்பட்டது. ஆனால் தற்போது இந்த நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளது.

இனி மின்வாரிய அலுவலகங்களிலும், சேவை மையங்களிலும், ஆதார் எண்ணையும், மின் இணைப்பு எண்ணையும் கொடுத்து விட்டு சென்றால் போதும் காத்திருக்க வேண்டியதில்லை என அதிகாரி ஒருவர் கூறினார்.

நீண்ட வரிசை

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் வரை மின்கட்டணம் செலுத்துவதில் எந்த தடையும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் ஆதார் எண்ணை இணைப்பதில் அவசரம் காட்டி மின்வாரிய அலுவலகங்களில் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இருப்பினும் விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று இணைத்து செல்கின்றனர்.

அருப்புக்கோட்டையில் சில இடங்களில் சர்வர் முடங்கியதால் ஆதார் எண்ணை இணைக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். எனவே மாவட்டம் முழுவதும் சர்வர் பிரச்சினை இல்லாமல் உடனுக்கு உடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கால அவகாசம் இருந்தாலும் எந்த வித சர்வர் பிரச்சிைன இல்லாமல் உடனுக்கு உடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்