பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
கீரனூர்:
கீரனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யோகரத்தினம் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கீரனூர் அருகே நெடும்பாறை குளம் பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த திருச்சி பஞ்சப்பூரை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 43), வீரடிவயல் ரவிச்சந்திரன் (65), கொத்தமங்கலம் பட்டி குமார் (37), முத்துக்குமார் (45), கோவிந்தராசு (55), பெரியசாமி (60), பாண்டிச்செல்வம் (43), மணியடிப்பட்டி முருகேசன் (37), பசுமலைப்பட்டி முத்து (52) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 52 சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.4,200-ஐ பறிமுதல் செய்தனர்.