கால்வாய்களை தூர்வார 9 பொக்லைன் எந்திரங்கள்

கால்வாய்களை தூர்வார 9 பொக்லைன் எந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

Update: 2022-11-04 15:52 GMT

வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சியில் உள்ள கால்வாய்களில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலைகளில் தேங்கி விடுகிறது. குறுகிய சாலைகளிலும் செல்லும் வகையில் மாநகராட்சி சார்பில் சிறிய ரக 4 பொக்லைன் எந்திரங்களும், பெரிய ரக 4 பொக்லைன் எந்திரங்களும், பெரிய ரக மற்றொரு பொக்லைன் எந்திரங்கள் என ரூ.3 கோடியே 40 லட்சத்துக்கு 9 எந்திரங்கள் வாங்கப்பட்டு உள்ளது.

புதிதாக வாங்கப்பட்ட எந்திரங்கள் ஒவ்வொரு மண்டலத்திற்கும் சிறிய மற்றும் பெரிய ரக எந்திரங்கள் என 4 மண்டலங்களுக்கும் 8 எந்திரங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பெரிய ரக எந்திரம் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் தூர்வார பயன்படுத்தப்பட உள்ளது. புதிதாக வாங்கப்பட்ட எந்திரங்களுக்கு நேற்று பழைய மாநகராட்சி அலுவலகத்தில் பூஜை போடப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

கார்த்திகேயன் எம்.எல்.ஏ, மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலையில் பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர்கள் வீனஸ் நரேந்திரன், யூசுப்கான், வெங்கடேசன், கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்