நெல்லை மாவட்டத்தில் 89 பேருக்கு கொரோனா
நெல்லை மாவட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் 89 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 89 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 390 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில் 29 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர்.
இதேபோல் தென்காசி மாவட்டத்திலும் கொரோனா பரவல் சற்று அதிகரித்து 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவுக்கு 71 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில் நேற்று 20 பேர் குணமடைந்து உள்ளனர்.