கடலூா் மாவட்டத்தில் தேசிய திறனாய்வு தேர்வு 8,230 மாணவர்கள் எழுதினர்

கடலூா் மாவட்டத்தில் நடந்த தேசிய திறனாய்வு தேர்வை 8,230 மாணவர்கள் எழுதினர்.

Update: 2023-02-25 18:45 GMT

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 8-ம் வகுப்பு படித்து முடித்துள்ள மாணவர்களுக்கு தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ-மாணவிகளுக்கு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தேசிய திறனாய்வு தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் தேசிய திறனாய்வு தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காக கடலூர் மஞ்சக்குப்பம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித வளனார் மேல்நிலைப்பள்ளி உள்பட 24 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது.

இதற்காக மாணவ-மாணவிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியர்களுடன் காலையிலேயே சென்றனர். பின்னர் சோதனைக்கு பிறகு மாணவர்கள் தேர்வறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 1 மணி வரை நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 8-ம் வகுப்பு படித்து முடித்த 8,230 மாணவ-மாணவிகள் திறனாய்வு தேர்வை எழுதியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்