கடந்த 3 நாட்களில் புகையிலை, கஞ்சா விற்ற 81 பேர் கைது

கடந்த 3 நாட்களில் புகையிலை, கஞ்சா விற்ற 81 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-08-25 20:25 GMT

மதுரை மாநகரில் போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவின்படி உயிருக்கு கேடு விளைவிக்கும் கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருட்கள் ஒழிப்பு சம்பந்தமாக தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் நகர் முழுவதும் கடந்த 3 நாட்களாக நடந்த தீவிர சோதனையின் மூலம் 15 கஞ்சா வழக்குகள் பதியப்பட்டு 16 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 1 கிலோ 946 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. புகையிலை, பாக்கு சோதனையின் மூலம் 65 வழக்குகள் பதியப்பட்டு 65 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 9 கிலோ 555 கிராம் புகையிலை பாக்கு பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மூலம் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் சொத்துக்கள் முடக்கம் செய்யப்படும் என்று போலீஸ் கமிஷனர் எச்சரித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்