5 இரவு காவலர் பணியிடத்துக்கு 800 பேர் குவிந்தனர்

கோவை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் 5 இரவு காவலர் பணியிடத்துக்கு நடைபெற்ற நேர்முக தேர்வில் என்ஜினீயரிங் பட்டதாரிகள் உள்பட 800 பேர் கலந்து கொண்டனர்.

Update: 2023-04-11 18:45 GMT


கோவை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் 5 இரவு காவலர் பணியிடத்துக்கு நடைபெற்ற நேர்முக தேர்வில் என்ஜினீயரிங் பட்டதாரிகள் உள்பட 800 பேர் கலந்து கொண்டனர்.

இரவு காவலர் பணி

கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் இரவு காவலர் பணிக்கான ஆட்கள் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த பணிக்கு 5 பேர் தேவை என்றும், இதற்கு கல்வித் தகுதி 10-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.

எனவே இந்த பணிக்கு கோவை மாவட்டத்தை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு நேர்முக தேர்வுக்கான அழைப்பாணை கடிதம் சம்பந்தப்பட்ட துறை மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான நேர்முக தேர்வு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

800 பேர் பங்கேற்பு

இதில் பெண்கள் உள்பட சுமார் 800 பேருக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சான்றிதழ் சரி பார்க்கும் பணி மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இந்த பணிக்கு 10-ம் வகுப்பு கல்வித்தகுதியாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனாலும் பட்டதாரிகள், என்ஜினீயரிங் பட்டதாரிகள் அதிகம் வந்திருந்தனர். அவர்களின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. இதை யடுத்து தகுதியின் அடிப்படையில் பணிக்கான ஆணை வழங்கப் படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

என்ஜினீயரிங் பட்டதாரி

இது குறித்து நேர்முக தேர்வில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், ஊரக வளர்ச்சித் துறைக்கு இரவு காவலர் பணிக்கு ஆட்கள் தேர்வு அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு நாங்கள் விண்ணப் பித்து இருந்தோம்,

எங்களுக்கு அழைப்பாணை கடிதம் வந்தது. இந்த வேலைக்கு கல்வி தகுதி 10-ம் வகுப்பு தான். ஆனால் அரசு வேலை என்பதால் பட்டதாரிகள் மற்றும் என்ஜினீயரிங் படித்தவர்கள் கூட வந்து கலந்து கொண்டனர்.

5 இரவுக்காவலர் பணிக்கு 800 பேருக்கு மேல் வந்தனர். தகுதி அடிப்படையில் பணி நியமன ஆணை அனுப்பப்படும் என்று அதிகாரிகள் கூறியதாக தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்