800 கிலோ ரேஷன்அரிசி பறிமுதல்

திண்டுக்கல் அருகே வேனில் கடத்தி வரப்பட்ட 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-10-06 20:00 GMT

திண்டுக்கல் அருகே எரியோடு பகுதியில் ரேஷன்அரிசி கடத்தி செல்லப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு விஜயகார்த்திக்ராஜ் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் கீதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், முருகானந்தம் மற்றும் போலீசார் எரியோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகப்படும் வகையில் வேகமாக வந்த ஒரு வேனை போலீசார் மறித்தனர். ஆனால் சிறிது தூரத்துக்கு முன்பே வேனை நிறுத்தி விட்டு, அதில் இருந்து இறங்கிய 2 பேர் தப்பியோடி விட்டனர். இதை தொடர்ந்து போலீசார், வேனை சோதனை செய்தனர். அதில், வேனில் ரேஷன்அரிசியை கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. எனவே 16 மூட்டைகளில் இருந்த 800 கிலோ ரேஷன்அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வேடசந்தூரை அடுத்த பிலாத்து பகுதியை சேர்ந்த திருமலைசாமி, விஜயகிருஷ்ணா ஆகியோர் ரேஷன்அரிசியை கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்