ராணுவ வீரர் மனைவியிடம் 8 பவுன் சங்கிலி பறிப்பு
தோட்டத்தில் பூப்பறித்து கொண்டிருந்த ராணு வீரர் மனைவியிடம் 8 பவுன் தங்க சங்கிலி பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
வத்தலக்குண்டு அருகே உள்ள மலலனம்பட்டியை சேர்ந்தவர் முருகன். முன்னாள் ராணுவ வீரர். அவருடைய மனைவி சுமதி (வயது 47). ேநற்று அதிகாலை இவர், ஊரையொட்டி உள்ள தனது தோட்டத்தில் பூப்பறித்து கொண்டிருந்தார்.
அப்போது தோட்டத்தில் அவருக்கு பின்புறமாக வந்த வாலிபர் ஒருவர், சுமதி அணிந்திருந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு கண்இமைக்கும் நேரத்தில் தப்பி ஓடி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுமதி அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் அப்பகுதியில் தேடினர். ஆனால் அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் சுமதி புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்லா வழக்குப்பதிவு செய்து, மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்.