மூதாட்டியிடம் 8½ பவுன் சங்கிலி பறிப்பு
மூதாட்டியிடம் 8½ பவுன் சங்கிலி பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சி, கே.கே.நகர், சுந்தர்நகர் பகுதியை சேர்ந்தவர் சென்பகவல்லி (வயது 72). இவர் தனது வீட்டை வாடகைக்கு விடுவதாக பெயர் பலகை எழுதி வெளியே போட்டிருந்தார். வாடகைக்கு வீடு பார்பதுபோல 2 மர்ம ஆசாமிகள் வீட்டுக்கு வந்துள்ளனர். பிறகு வீட்டை சுற்றிப் பார்த்துவிட்டு குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டுள்ளனர். குடிநீர் கொண்டு வர சென்பகவல்லி வீட்டுக்குள் சென்றார். அப்போது பின் தொடர்ந்து சென்ற ஆசாமிகள் சென்பகவல்லியை கீழே தள்ளி அவர் அணிந்திருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள 8 ½ பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை பறித்த மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.