17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 8 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருவிழாவுக்கு வந்த 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 8 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.;

Update:2024-05-05 10:24 IST

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் கடந்த மார்ச் 8-ந்தேதி இரவு வீரக்குமாரசாமி கோவில் திருவிழாவையொட்டி இசைக் கச்சேரி நடந்தது. இதனை பார்த்துக் கொண்டிருந்த 17 வயது சிறுமியை ஒரு கும்பல் கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது.

இது தொடர்பாக வௌ்ளகோவில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வெள்ளகோவில் ராஜீவ் நகரை சேர்ந்த மணிகண்டன் (29), காமராஜபுரம் பிரபாகரன் (32), சீரங்கராயன்வலசு பகுதியைச் சேர்ந்த சதீஷ் (28), மயில்ரங்கம் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் (30), ஏ.பி.புதூர் பகுதியை சேர்ந்த நவீன்குமார் (26) மற்றும் மூலனூர் மாம்பாடி பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (28), பாலசுப்பிரமணி (30), வெள்ளகோவில் சிவநாதபுரம் மோகன்குமார் (32) ஆகிய 8 பேரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் இவர்கள் 8 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலெக்டர் கிறிஸ்துராஜிக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் 8 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி 8 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவு கோவை மத்திய சிறையில் இருக்கும் அவர்களிடம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்