அருப்புக்கோட்டை கோர்ட்டில் 8 பேர் சரண்

திண்டுக்கல் தி.மு.க. பிரமுகர் கொலையில் அருப்புக்கோட்டை கோர்ட்டில் 8 பேர் சரண் அடைந்தனர்.;

Update:2023-07-22 00:44 IST

அருப்புக்கோட்டை,


திண்டுக்கல் தி.மு.க. பிரமுகர் கொலையில் அருப்புக்கோட்டை கோர்ட்டில் 8 பேர் சரண் அடைந்தனர்.

தி.மு.க. பிரமுகர் கொலை

திண்டுக்கல் தீப்பாச்சி அம்மன் கோவில் கொல்லம்பட்டறை பகுதியை சேர்ந்தவர் சரவணன் என்ற பட்டறை சரவணன் (வயது 30). இவர் திண்டுக்கல் கிழக்கு பகுதி தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளராக இருந்தார்.

இந்தநிலையில் திண்டுக்கல் அண்ணாநகர் பகுதிக்கு சரவணன் தனது 2 வயது குழந்தையுடன் வந்தார். அப்போது அங்கு காரில் வந்த ஒரு கும்பல் சரமாரியாக, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் அந்த குழந்தையின் கண்முன் அவரை வெட்டிக் கொலை செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

8 பேர் சரண்

இந்த கொலை தொடர்பாக திண்டுக்கல்லை சேர்ந்த ஆசிக் முகமது (வயது 29), முகமது மீரான் (24), கலீல் அகமது (23), சதாம் உசேன் (23), முகமது இர்பான் (25), சக்தி மகேஸ்வர் (23), முகமது அப்துல்லா (27), சேக் அப்துல்லா (26) ஆகிய 8 பேர் அருப்புக்கோட்டை குற்றவியல் கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தனர்.

நீதிபதி முத்து இசக்கி அவர்களிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து அவர்களை திண்டுக்கல் கோர்ட்டுக்கு அழைத்துச் செல்ல உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திண்டுக்கல் கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்