கடலூர் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கடலூர் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

Update: 2023-04-05 18:45 GMT

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கி உள்ளது. இதுவரை மாவட்டத்தில் 76 ஆயிரத்து 84 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவு வெளியான நிலையில், புதிதாக 8 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 ஆயிரத்து 92 ஆக உயர்ந்தது. இது வரை 75 ஆயிரத்து 160 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்ற நிலையில், நேற்று 7 பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று வரை கொரோனா பாதித்த 32 பேர் கடலூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வெளி மாவட்டத்தை சேர்ந்த 2 பேரும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நோய் பரவலை தடுக்க பொதுமக்கள் பொது இடங்களில் செல்லும் போது, கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று மாவட்ட சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்