கடலூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க 7-ந்தேதி கடைசி நாள்

கடலூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்காக விண்ணப்பிக்க வருகிற 7-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

Update: 2023-05-26 18:45 GMT

கடலூர் மாவட்டத்தில், கடலூர், கடலூர் (மகளிர்), சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், மங்களூர் மற்றும் நெய்வேலி ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2023-ம் ஆண்டு பயிற்சியாளர்கள் சேர்க்கை இணையவழி கலந்தாய்வு மூலம் நடைபெற உள்ளது.

இதற்காக www.skilltraining.tn.gov.in என்ற இணைதளம் வாயிலாக கடந்த 24-ந்தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. மாணவ, மாணவிகள் இந்ந வாய்ப்பை பயன்படுத்தி அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர்ந்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நவீன தொழில்நுட்பம்

மேலும் அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலைங்களில் உள்ள தொழிற் பிரிவு விவரங்களை அறிய www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்தை பார்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. மாணவர்களின் விண்ணப்பங்கள் அடிப்படையில் மதிப்பெண் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை, இதே இணையதளத்தில் வெளியிடப்படும்.

தொழிற் பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோரும் ரூ 750 உதவித்தொகை மற்றும் விலையில்லா மிதிவண்டி, புத்தகம், காலணி, சீருடை, வரைபடக் கருவிகள் ஆகியவை வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்து தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு (மின்சாரப்பணியாளர் மற்றும் பொருத்துனர் பிரிவு) சுய வேலை வாய்ப்பு செய்திடும் வகையில் கை கருவிகள் அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது.மாறிவரும் தொழிற்சாலைகளின் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு முன்னணி தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தொழிற்நுட்ப மையங்களாக உயர்த்தப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.

கடைசி நாள்

மேலும் பயிற்சியின் போதே பிரபல தொழில் நிறுவனங்களில் இன்டான்ஷிப் டிரெய்னிங் உதவித் தொகையுடன் வழங்கப்படும். பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும். இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் 7.6.2023 ஆகும்.

இந்த இணையதள வழியிலான கலந்தாய்வில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04142 - 290273 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்