குரூப்-1 தேர்வை 7,737 பேர் எழுதினர்

கோவையில் குரூப்-1 தேர்வை 7,737 பேர் எழுதினர்.

Update: 2022-11-19 18:45 GMT

குரூப்-1 தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப்-1 முதல்நிலை தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

இதில், கோவை மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத 15,082 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் தேர்வு எழுத வசதியாக மாவட்டம் முழுவதும் 49 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

எனவே அந்த மையங்க ளில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.

இந்த தேர்வில் தேர்வர்கள் காப்பி அடிப் பதை தடுக்க சப்- கலெக்டர் அந்தஸ்திலான 5 அலுவலர்கள் தலைமையில் பறக்கும் படை அமைக்கப்பட்டு இருந்தது.

12 மொபைல் அலுவலர்கள், 49 தேர்வுக்கூட கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர்.

ஹால்டிக்கெட் பரிசோதனை

இந்த தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப் பட்டு இருந்தது. தேர்வர்கள் 9 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

எனவே காலை 7.30 மணி முதல் அந்தந்த தேர்வு மையங்கள் முன்பு தேர்வர்கள் குவிந்தனர்.

தேர்வர்கள் அங்கிருந்த பலகையில் ஒட்டப்பட்டிருந்த வரிசை எண்களை சரிபார்த்து தங்களுக்கான தேர்வறைகளுக்கு சென்ற னர். முன்னதாக தேர்வர்களை போலீசார் தீவிர சோதனை செய்தனர்.

ஆள்மாறாட்டத்தை தடுக்க ஹால்டிக்கெட்டை சரி பார்த்த பிறகேதேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

பாதுகாப்பு

தேர்வு மையத்துக்கு தாமதமாக வந்தவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. நேற்று நடைபெற்ற இந்த தேர்வை 7,737 பேர் எழுதினர். இது 51 சதவீதமாகும். மேலும் 7,345 பேர் தேர்வு எழுத வரவில்லை. குரூப்-1 தேர்வு மையங்களில் போதிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்