மதுரையில் 70 ஆண்டுகள் பழமையான கட்டடம் தீடிரென இடிந்து விழுந்தது...!
மதுரையில் 70 ஆண்டுகள் பழமையான கட்டடம் தீடிரென இடிந்து விழுந்தது.;
மதுரை
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே 70 ஆண்டுகள் பழமையான கட்டடம் நள்ளிரவில் திடீரென இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவு நேரம் என்பதாலும் ஆட்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தாலும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கிருந்த உணவகம் பழக்கடை பெட்டிக் கடைகள் உள்ளிட்ட நான்கிற்கும் மேற்பட்ட கடைகள் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி சேதமடைந்துள்ளன. தொடர்ந்து கடை உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இடிந்து விழுந்த கட்டடத்தை அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.