7 வயது சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு: வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் - செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு

7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பளித்தது.;

Update:2023-03-02 20:42 IST

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அரையப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 27). இவர் அதே பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு இவர் தனது வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 7 வயது சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இது குறித்து மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு செங்கல்பட்டு போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் பாலாஜி மீது சுமர்த்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உறுதியானதையடுத்து அவருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து போக்சோ சிறப்பு கோர்ட்டு நீதிபதி தமிழரசி தீர்ப்பளித்தார்.

அரசு தரப்பில் வக்கீல் புவனேஷ்வரி ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்