ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் விடுவிப்பு

இலங்கை சிறையில் இருந்து ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் விடுவிக்கப்பட்டனர்.;

Update:2022-11-10 00:04 IST

ராமேசுவரம்

இலங்கை சிறையில் இருந்து ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் விடுவிக்கப்பட்டனர்.

சிறையில் அடைப்பு

ராமேசுவரத்தில் இருந்து கடந்த 27-ந் தேதி ஒரு விசைப்படகில் மீன் பிடிக்க சென்ற 7 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தது.

அந்த மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

தூதரகத்தில் ஒப்படைப்பு

இந்தநிலையில் இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேசுவரத்தை சேர்ந்த 7 மீனவர்கள் நேற்று பருத்தித்துறை ேகார்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி, 7 மீனவர்களையும் விடுவித்து உத்தரவிட்டு, படகு உரிமையாளர் அனைத்து ஆவணங்களுடன் வருகிற ஜனவரி 27-ந் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும். இல்லையெனில் படகு இலங்கை அரசுடைமை ஆக்கப்படும் என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை தொடர்ந்து, 7 மீனவர்களும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். விரைவில் அவர்கள் தமிழகம் அழைத்து வரப்படுவார்கள் என்று தெரிகிறது. இருப்பினும், கடந்த 5-ந் தேதி மீன் பிடிக்க சென்ற ராமேசுவரம் மீனவர்கள் 15 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்