கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற ெபண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு
கடையம் அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் தங்கநகையை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர்.
கடையம்:
கடையம் அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் தங்கநகையை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர்.
கணவருடன் சென்ற பெண்
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள புலவனூர் பொன்மலைநகரைச் சேர்ந்தவர் ராமர். இவரது மனைவி சங்கீதா. இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவில் புலவனூரில் இருந்து மாதாபுரத்திற்கு தனது உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
ஜெபமாலை சர்ச் முன்பு சென்றுகொண்டிருந்த போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 மர்மநபர்கள் வந்தனர்.
7 பவுன் பறிப்பு
அவர்கள் திடீரென்று சங்கீதாவின் கழுத்தில் கிடந்த 44 கிராம் தங்க சங்கிலி, 22 கிராம் தங்க சங்கிலி ஆகியவற்றை பறித்தனர். இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி சங்கீதா கீழே விழுந்தார். எனினும் மர்மநபர்கள், சங்கீதா கழுத்தில் கிடந்த 56 கிராம் தங்க நகை, அதாவது 7 பவுன் நகையை பறித்துசென்றுவிட்டனர். மீதமுள்ள நகைகள் அறுந்து கீழே கிடந்தது. அதை சங்கீதா எடுத்துக் கொண்டார்.
வலைவீச்சு
இதுகுறித்து கடையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் விஜயகுமார் விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.