கரூர் மாவட்ட மது விலக்கு போலீசார் நேற்று முன்தினம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மண்மங்கலத்தை சேர்ந்த வசந்தா (வயது 71), தும்பிவாடியை சேர்ந்த சண்முகம் (58), அன்பழகன் (55), கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த செல்வராஜ் (44), கடவூரை சேர்ந்த குருபிரசாத் (22), புதுக்கோட்டையை சேர்ந்த வால்மீகிநாதன் (38), ரெங்கநாதபுரத்தை சேர்ந்த கணேசன் (60) ஆகிய 7 பேர் பல்வேறு இடங்களில் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 105 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.