மயிலாடுதுறை மாவட்டத்தில் 7 லட்சத்து 63 ஆயிரத்து 645 வாக்காளர்கள்

மயிலாடுதுறை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 7 லட்சத்து 63 ஆயிரத்து 645 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட பெண்களே அதிகமாக உள்ளனர்.

Update: 2022-11-09 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 7 லட்சத்து 63 ஆயிரத்து 645 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட பெண்களே அதிகமாக உள்ளனர்.

பட்டியல் வெளியீடு

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான லலிதா வெளியிட்டார்.அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 860 வாக்குச்சாவடிகள் உள்ளன. சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார் ஆகிய சட்டசபை தொகுதிகளில் உள்ள மொத்த வாக்காளர்கள் 7 லட்சத்து 63 ஆயிரத்து 645 ஆகும். அதில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 642 ஆண்களும், 3 லட்சத்து 86 ஆயிரத்து 985 பெண்களும் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 18 பேரும் உள்ளனர். இதில் ஆண்களை விட பெண்களே அதிகம்.

சீர்காழி

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 3 சட்டசபை தொகுதிகளில் முறையே கீழ்க்கண்டவாறு வாக்காளர்கள் உள்ளனர். சீர்காழி (தனி) சட்டமன்ற தொகுதியில், 1 லட்சத்து 23 ஆயிரத்து 459 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 27 ஆயிரத்து 53 பெண் வாக்காளர்களும், 6 மூன்றாம் பாலினத்தவர்களும் என ஆக மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரத்து 518 வாக்காளர்கள் உள்ளனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை சட்டசபை தொகுதியில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 353 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 20 ஆயிரத்து 901 பெண் வாக்காளர்களும், 9 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2 லட்சத்து 39 ஆயிரத்து 263 வாக்காளர்கள் உள்ளனர்.

பூம்புகார்

பூம்புகார் சட்டசபை தொகுதியில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 830 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 39 ஆயிரத்து 31 பெண் வாக்காளர்களும், 3 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2 லட்சத்து 73 ஆயிரத்து 864 வாக்காளர்கள் உள்ளனர்.மேலும் 1.1.2023-ஐ தகுதி நாளாக கொண்டு நடைபெறும் சிறப்பு சுருக்க திருத்தம் 2023-ன்படி 18 வயது நிரம்பியவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றத்திற்கான சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் வருகின்ற 12.11.2022, 13.11.2022, 26.11.2022 மற்றும் 27.11.2022 ஆகிய நாட்களில் நடக்கிறது. மேலும் அதே நாட்களில் உதவி கலெக்டர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பம் அளிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், உதவி கலெக்டர் யுரேகா, நகர சபை தலைவர் செல்வராஜ், தேர்தல் துணை தாசில்தார் ராஜரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தரங்கம்பாடி

தரங்கம்பாடி தாசில்தார் அலுவலகத்தில் பூம்புகார் சட்டசபை தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தரங்கம்பாடி தாசில்தார் புனிதா தலைமை தாங்கினார். தரங்கம்பாடி தாலுகா தேர்தல் துணை தாசில்தார் விஜயராணி பட்டியலை வெளியிட்டார். நிகழ்ச்சியில் தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற தலைவர் சுகுணசங்கரி குமரவேல் மற்றும் வார்டு உறுப்பினர்கள் அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலை பார்வையிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்