ரெயிலில் கடத்திய 7 கிலோ கஞ்சா பறிமுதல்
ரெயிலில் கடத்திய 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.;
காட்பாடி- ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே ஓடும் ரெயில்களில் கஞ்சா கடத்தப்படுகிறதா என்பது குறித்து சேலம் உட்கோட்ட ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் அடங்கிய தனிப்படையினர் சோதனை மேற்கொண்டனர். ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் 1-வது பிளாட்பாரத்தில் வந்து நின்ற ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் ரெயில் நிலையத்தில் இருந்து கேரளா மாநிலம் ஆலப்புழை வரை செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை செய்தபோது சந்தேகத்தின் பேரில் 2 வாலிபர்களின் உடமைகளை சோதனை செய்தனர்.
அப்போது ஒரு பையில் 7 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் 2 வாலிபர்களும் ஒடிசா மாநிலம், பெல்பாரா கடம்படா பகுதியை சேர்ந்த ஷியாம் சிங் என்பவரின் மகன் சுஜித் நாக் (வயது 29), கசல்பூர் பகுதியைச் சேர்ந்த புராணசந்திர பகா என்பவரின் மகன் பிபேகானந்தா பகா (31) என்பதும், ஜார்க்கண்ட் மாநிலம் பலாஸ்கீர் ரெயில் நிலையத்தில் இருந்து திருப்பூருக்கு வந்ததும் தெரியவந்தது.
இதனை அடுத்து 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.