லாரி மோதி 7 ஆடுகள் பலி

லாரி மோதி 7 ஆடுகள் பலியானது.;

Update:2023-03-09 00:33 IST

புதுக்கோட்டை கணேஷ் நகரை சேர்ந்தவர் ராஜா (வயது 31). இவர் நேற்று தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக புதுக்கோட்டை-தஞ்சாவூர் சாலையில் ஓட்டி சென்றார்.அப்போது அரியலூரில் இருந்து புதுக்கோட்டைக்கு சிமெண்டு லோடு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. அந்த லாரி திடீரென சாலையில் சென்று கொண்டிருந்த ஆடுகள் மீது மோதியது. இதில் 7 ஆடுகள் உடல் நசுங்கி பலியாகின. மேலும் 6 ஆடுகள் காயமடைந்தன. இதனால் பீதியடைந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில், லாரியின் டிரைவர் புதுக்கோட்டையை சேர்ந்த முத்துக்குமார் (45) என்பதும், புதுக்கோட்டையில் உள்ள ஒரு கடைக்கு லோடு ஏற்றி வந்ததும் தெரியவந்தது. பலியான ஆடுகளை ஆட்டின் உரிமையாளர் சரக்கு வேனில் எடுத்து சென்றார். காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. லாரியை டவுன் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் கொண்டு சென்றனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்