இந்து முன்னணியினர் 65 பேர் கைது

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினர் 65 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-07 16:49 GMT

திண்டுக்கல் மாவட்ட இந்து முன்னணி சார்பில், வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சதீஷ் சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராஜா, மாவட்ட செயலாளர் பிரதீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு கண்டனம் தெரிவித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே சம்பவ இடத்துக்கு வந்த வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு துர்காதேவி, இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் தலைமையிலான போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 65 பேரை கைது செய்தனர். அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்த இந்து முன்னணியினரை மாலையில் போலீசார் விடுவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்