பொள்ளாச்சியில் 643 வழக்குகளுக்கு தீர்வு

பொள்ளாச்சியில் நடந்த தேசிய லோக் அதாலத்தில் 643 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2023-09-09 19:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் நடந்த தேசிய லோக் அதாலத்தில் 643 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

லோக் அதாலத்

நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்கும் வகையில் தேசிய லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) நடத்தப்படுகிறது. அதன்படி பொள்ளாச்சி சப்-கோர்ட்டில் நடந்த லோக் அதாலத்திற்கு கோவை மாவட்ட கூடுதல் நீதிபதி சஞ்சீவ் பாஸ்கர் தலைமை தாங்கினார். இதில் சப்-கோர்ட்டு நீதிபதி மோகனவள்ளி, கூடுதல் மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பாரதியராஜன், ஜே.எம்.-2 கோர்ட்டு நீதிபதி பிரகாசம், ஜே.எம்.-1 கோர்ட்டு நீதிபதி சுவேதாரண்யன், வக்கீல்கள் சங்க தலைவர் துரை, செயலாளர் கணேஷ் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

சமரச தீர்வு

113 மோட்டார் வாகன விபத்துகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 78 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.3 கோடியே 26 லட்சத்து 46 ஆயிரத்து 500 இழப்பீடு வழங்கப்பட்டது. 12 கடன் வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, 8 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இது ரூ.32 லட்சத்து 52 ஆயிரத்து 220-க்கு சமரச மானது.

70 காசோலை மோசடி வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, 45 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.1 கோடியே 47 லட்சத்து 84 ஆயிரத்து 181-க்கும் சமரசம் ஆனது. மேலும் பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் மொத்தம் 821 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. முடிவில் 643 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் ரூ.5 கோடியே 44 லட்சத்து 33 ஆயிரத்து 501-க்கு சமரசம் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்