62 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

சாத்தூரில் 62 கிலோ கெட்டுப்போன மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-05-17 20:09 GMT

சாத்தூர்,

சாத்தூரில் 62 கிலோ கெட்டுப்போன மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மீன்கள் பறிமுதல்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்புதுறை நியமன அலுவலர் மற்றும் மீன்வளத்துறை உதவி இயக்குனரின் அறிவுறுத்தலின்படி சாத்தூர் நகர உணவு பாதுகாப்பு அலுவலர் மோகன்குமார், மீன்வளத்துறை அதிகாரி சைலஜா மற்றும் மீன்வள மேற்பார்வையாளர் ராமகவுண்டன் ஆகியோர் அடங்கிய குழுவினர் சாத்தூர் நகர் பகுதிகளில் உள்ள மீன் கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது புறவழிச்சாலை பகுதியில் உள்ள ஒரு கடையில் 12 கிலோ எடை கொண்ட கெட்டுப்போன மீன்கள் மற்றும் பழைய படந்தால் ரோட்டில் உள்ள கடையில் தேதி குறிப்பிடாத பாக்கெட்டில் அடைக்கப்பட்ட 50 கிலோ எடையுள்ள கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

அபராதம் விதிப்பு

மேலும் கெட்டுப்போன, உண்பதற்கு தகுதியற்ற மீன்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

அதேபோல தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை உபயோகித்த கடைக்காரருக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்