6 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லையில் 6 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
நெல்லையில் 6 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
குண்டர் சட்டம்
நெல்லை சந்திப்பு துவரை அலுவலகம் கைலாசபுரத்தை சேர்ந்தவர் முருகன் மகன் செந்தில்வேல் முருகன் (வயது 25). இவர் மீது கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் வழக்குகள் உள்ளன.
மேலும் இவர் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் (மேற்கு) சரவணகுமார் மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தார். அதனை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் ஏற்று செந்தில்வேல் முருகனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதற்கான ஆணையை நெல்லை சந்திப்பு போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கினர்.
5 வாலிபர்கள்
இதேபோல் நெல்லை தாழையூத்து பகுதியை சேர்ந்தவர்கள் அஜித்குமார் (27), சுரேஷ் (20), கணேசன் (26), ஷெரின் (24), சரவணன் என்ற முருகன் (24). இவர்கள் மீது தாழையூத்து போலீஸ் நிலையத்தில் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் அவர்கள் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
இதனை ஏற்ற கலெக்டர் விஷ்ணு, 5 வாலிபர்களையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான ஆணையை தாழையூத்து போலீசார் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கினர்.