சிறுமிகளிடம் தவறாக நடந்த வாலிபருக்கு 6 ஆண்டு சிறை

வள்ளியூர் அருகே சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்ட வாலிபருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2022-11-01 21:12 GMT

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள வைராவிகிணறு பகுதியை சேர்ந்தவர் சரண்ராஜ் (வயது 28). இவர் வெளிநாட்டில் வேலை செய்து திரும்பியவர். இவர் 2 சிறுமிகளிடம் தவறாக நடந்துள்ளார். இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர்கள் வள்ளியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி, சரண்ராஜ் மீது 2 வழக்குகள் பதிவு செய்து, அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கு நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி விசாரித்து, குற்றம் சாட்டப்பட்ட சரண்ராஜ்க்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்