கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சிலர் மதுபானங்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக கரூர் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் கரூர் மதுவிலக்கு போலீசார் வெங்கமேடு, வாங்கல், தோகைமலை டெக்ஸ் பார்க் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அப்பகுதிகளில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த ராமநாதபுரத்தை சேர்ந்த வினோத்(வயது 28), மண்மங்கலத்தை சேர்ந்த சிவசாமி(40), கழுகூரை சேர்ந்த மாரியாயி(42), தோகைமலையை சேர்ந்த ரமேஷ்(34), ஆவுடையார்கோவிலை சேர்ந்த சுதாகர்(24), ஜெயபாரதி(38) ஆகிய 6 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 38 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.