பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
கீரமங்கலம் அருகே உள்ள மேற்பனைக்காடு மேற்கு பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணம் வைத்து சூதாடிய 6 பேரை மடக்கி பிடித்து கீரமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.