நாமக்கல்லில்பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

Update: 2023-07-25 18:45 GMT

நாமக்கல் - சேலம் சாலை முருகன் கோவில் பஸ்நிறுத்தம் அருகில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சூதாடிக் கொண்டு இருந்த கும்பலை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இதில் கமலக்கண்ணன் (வயது47), சந்திரகுமார் (42). வீரக்குமார் (38), அருள் (50), மணிராஜ் (26), பாஸ்கர் (40) 6 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.20 ஆயிரத்து 600 பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்