மாற்றுத்திறனாளி பெண்கள் உள்பட 6 பேர் உடல் உறுப்பு தானம்
மாற்றுத்திறனாளி பெண்கள் உள்பட 6 பேர் உடல் உறுப்பு தானம் செய்தனர்.
விராலிமலை:
விராலிமலை வடக்கு தெருவில் உள்ள தனியார் அறக்கட்டளை சார்பில் 75-வது சுதந்திர தினத்தையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து விராலிமலை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த தமிழ்செல்வி (வயது 39), வடக்கு தெருவை சேர்ந்த தமிழரசி (48), சாந்தி (48), மணிமேகலா (34), நந்தினி (29), சதீஸ் ராஜா (39) ஆகிய 6 பேரும் சுதந்திர தினத்தில் உடல் உறுப்பு தானம் செய்வதாக முடிவு செய்தனர். இதையடுத்து அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து அதனை கொடும்பாளூர் அரசு ஆரம்ப சுகாதார ஆய்வாளர் செல்வராஜிடம் கொடுத்தனர். பின்னர் அவர் இந்த விவரங்கள் அடங்கிய படிவத்தினை புதுக்கோட்டை மாவட்ட தலைமை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைப்பதாக தெரிவித்தார். உடல் உறுப்பு தானம் செய்த 6 பேரில் 4 பெண்கள் மாற்றுத்திறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.