கார் கண்ணாடியை உடைத்த 6 பேர் கைது
கார் கண்ணாடியை உடைத்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் பி.எஸ்.கே. நகரை சேர்ந்தவர் பாலா ராஜேஷ் (வயது 33). இவர் தனது நண்பர்களுடன் முடங்கியார் சாலையில் உள்ள தோட்டத்திற்கு காரில் சென்றார். பின்னர் அவர் மீண்டும் திரும்பி ராஜபாளையம் வரும் போது தாலுகா அலுவலகம் முன்பு 6 பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்து காரின் கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது. அத்துடன் காரில் உள்ளவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து அவர்கள் வைத்திருந்த செல்போனை திருடி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாலா ராஜேஷ் அளித்த புகாரின் பேரில் வடக்கு போலீசார், 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.