மது விற்ற 6 பேர் கைது

மது விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-05-28 18:20 GMT

தோகைமலை, 

தோகைமலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தோகைமலை டாஸ்மாக் பின்புறம் திருச்சி மாவட்டம் உறையூர் பாண்டமங்கலத்தை சேர்ந்த சங்கர் (வயது 38), கொசூர் டாஸ்மாக் பின்புறம் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த வெள்ளையகவுண்டனூர் வெங்கடேஷ் (35), தோகைமலை அருகே உள்ள அ.உடையாபட்டியை சேர்ந்த செந்தில்குமார் தனது பெட்டிக்கடையிலும், கொசூர் கம்பிளியாம்பட்டியை சேர்ந்த மருதை தனது பெட்டிக்கடையில் மது விற்றுக் கொண்டிருந்தனர். இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் நச்சலூர் பகுதியில் குளித்தலை போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது பொய்யாமணி நங்கம் வாய்க்கால் படித்துறை அருகே அதே பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் (39), நெய்தலூர் காலனி டாஸ்மாக் கடை அருகே சூரியனூர் பாறைப்பட்டியை சேர்ந்த திருபானந்தன் ஆகிய 2 பேரும் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்