தென்காசி மாவட்டத்திற்கு ஏப்ரல் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை - கலெக்டர் உத்தரவு
பங்குனி உத்திரத்தையொட்டி ஏப்ரல் 5ம் தேதி தென்காசி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.;
தென்காசி,
தமிழ்க்கடவுள் முருக பெருமானை மனதில் நினைத்து வழிபடும் தினமே பங்குனி உத்திரமாகும். தமிழ் மாதங்களில் 12வது மாதமான பங்குனியும், நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரமான உத்திரம் இவை இரண்டும் இணையும் நாளில் பங்குனி உத்திரம் திருவிழா கொண்டாடாப்படுகிறது.
இந்நாளில் பக்தர்கள் முருகனுக்கு தேர் இழுத்தும், அபிஷேகம் செய்தும் அவர்களது வேண்டுதலின் நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம்.இந்நிலையில் பங்குனி உத்திரத்தையொட்டி ஏப்ரல் 5ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உள்ளூர் விடுமுறையானது தேர்வெழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது எனவும் மாவட்ட கலெக்டர் துரை ரவிசந்திரன் அறிவித்துள்ளார். பங்குனி உத்திரத்திற்காக ஏற்கனவே நெல்லை மாவட்டத்திலும் ஏப்ரல் 5ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.