தீபாவளியின்போது விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக சென்னையில் 568 வழக்குகள் பதிவு
தீபாவளியின்போது விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த காரணத்திற்காக மாநிலம் முழுவதும் 2,206 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.;
சென்னை,
தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;
"தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களின் உத்தரவின் பேரில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட 12-11-2023 மற்றும் 13-11-2023 ஆகிய இரண்டு நாட்களில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பட்டாசு வெடிப்பதற்கான குறிப்பிட்ட நேரமான காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் மாலை 7 மணி முதல் 8 மணி தவிரத்து மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்த காரணத்திற்காக மாநிலம் முழுவது 2,246 பேர் மீது 2,206 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டது.
அதில் 2,095 பேர் கைதுசெய்யப்பட்டனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 568 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி செயல்பட்ட குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்ட 2,095 பேரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.