கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 52 போலீஸ்காரர்கள் இடமாற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 52 போலீஸ்காரர்கள் இடமாற்றம் சூப்பிரண்டு உத்தரவு

Update: 2022-06-24 17:23 GMT

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சண்முகவள்ளி, பெரியநாயகம், டோமினிக், பாலசுப்பிரமணியம், விஜயகுமார், ராஜதுரை, அருண்குமார், துரைசாமி, நாகராஜன், ஜான்கென்னடி, ராஜன்பாபு, இழையராஜா, தங்கதுரை உள்பட 22 போலீஸ்காரர்கள், இதே மாவட்டத்தில் உள்ள சட்டம்-ஒழுங்கு பிரிவு மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் சட்டம்-ஒழுங்கு பிரிவு மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த வெங்கடேசன், கேசவன், சதீஷ்குமார், இளையராஜா, செல்வகுமார், கண்ணன், கீதா, நித்யானந்தா, லட்சுமி, புஷ்பா, கீதாலட்சுமி, பரிமளா, உஷாநந்தினி, ஜெயலட்சுமி, கலையரசி, ராதிகா உள்பட 30 போலீஸ்காரர்கள் இதே மாவட்டதில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் நிலையத்துக்கு பணியிடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்