500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
பொன்னை அருேக 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.;
வேலூர் பறக்கும் படை தாசில்தார் விநாயகமூர்த்தி மற்றும் அதிகாரிகள் அண்டை மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுத்து வருகின்றனர். இந்தநிலையில் பொன்னையில் இருந்து சித்தூர் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பொன்ைன அருேக சாலையோரம் ேகட்பாரற்று மூட்டைகள் கிடந்தன. அதை அதிகாரிகள் பிரித்துப் பார்த்தபோது ரேஷன் அரிசியாக இருந்தது.
விசாரணையில் ஆந்திராவுக்கு கடத்த மர்மநபர்கள் 13 மூட்டைகளில் 500 கிலோ அரிசியை சாலையோரம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து, திருவலம் குடோனில் ஒப்படைத்தனர்.