500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்;

Update:2023-02-16 00:15 IST

நாகர்கோவில்:

நாகர்கோவில் வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் வெள்ளமடம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு சொகுசு கார் வந்தது. அந்த காரை நிறுத்தும்படி போலீசார் சைகை காட்டினர். ஆனால் போலீசாரை பார்த்ததும் கார் வேகமாக சென்றது.

இதைத் தொடர்ந்து போலீசார் தங்களது வாகனம் மூலம் சொகுசு காரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் காரை சோதனையிட்டபோது அதில் 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. விசாரணையில் இந்த அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது ெதரிய வந்தது.

இதையடுத்து போலீசார் காருடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து காரை ஓட்டி வந்த தேரேகால்புதூரை சேர்ந்த அன்சாரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்