500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்;

Update:2022-12-23 02:07 IST

நாகர்கோவில்:

குமரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி தலைமையிலான போலீசார் நேற்று குழித்துறை ஆதங்கோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை நிறுத்துமாறு சைகை காட்டினர். போலீசாரை கண்டதும் டிரைவர் காரை சாலையோரம் நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார். இதையடுத்து போலீசார் காரை சோதனை செய்தனர். அதில் சிறு சிறு மூடைகளில் 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் காருடன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்