ரெயிலில் கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
ரெயிலில் கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன.;
அரக்கோணம்
ரெயிலில் கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன.
அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் சப் -இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் ரேஷன் அரிசி, போதை பொருட்கள் கடத்தலை தடு்க்க நேற்று காலை திருத்தணி ரெயில் நிலைய பிளாட்பாரங்கள், அங்கு வந்து சென்ற ரெயில்களில் சோதனை நடத்தினர்.ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது 25 மூட்டைகளில் சுமார் 500 கிலோ ரேஷன் அரிசியை ஆந்திர மாநிலத்திற்கு கடத்துவதற்காக மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட திருத்தணி பகுதியை சேர்ந்த விஜயா (வயது 60), செல்வி (40), அன்னியம்மாள் (55), தீபாஞ்சலி (40), மற்றும் திருத்தணி அடுத்த நாரணமங்களத்தை சார்ந்த கன்னியம்மாள் (60). ஆகியோரை பிடித்தனர்.
இதனை தொடர்ந்து அவர்களை திருவள்ளூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கள் புலனாய்வு குற்றப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதாவிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.