அரசு மருத்துவமனைக்கு 500 போர்வைகள்

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு 500 போர்வைகள் வழங்கப்பட்டது.;

Update:2023-09-27 00:15 IST

சங்கரன்கோவில்:

தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு ராஜா எம்.எல்.ஏ. சொந்த நிதியிலிருந்து 500 போர்வைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மருத்துவமனை தலைமை மருத்துவர் செந்தில் சேகர் தலைமை தாங்கினார். மருத்துவர் மாரிராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் கேஎஸ்எஸ் மாரியப்பன் முன்னிலை வகித்தனர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு அரசு மருத்துவமனைக்கு 500 போர்வைகளை வழங்கினார். மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் மாரியப்பன் ஏற்பாட்டில் 100 தட்டுகள் மற்றும் டம்ளர்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சேர்மத்துரை, மாவட்ட மாணவரணி அப்பாஸ், மாவட்ட ஆதிதிராவிட நல குழு உறுப்பினர் சங்கர், நகர துணை செயலாளர்கள் முத்துக்குமார் சுப்புத்தாய், ஆதி தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் தென்னரசு, ஆதி தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ் முருகன், திராவிட தமிழர் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் மகாலிங்கம், தெற்கு மாவட்ட செயலாளர் கருவீரபாண்டியன், வடக்கு மாவட்ட தலைவர் லட்சுமணன், நிதிச் செயலாளர் கண்ணன், இளைஞர் அணி மதன், மாவட்ட துணை செயலாளர் தமிழரசன், சங்கரன்கோவில் ஒன்றிய செயலாளர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்