ஆஸ்திரேலியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் அமலானதால் 50 ஆயிரம் டன் பருத்தி இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் நூல் விலை சீராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் அமலானதால் 50 ஆயிரம் டன் பருத்தி இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் நூல் விலை சீராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-12-31 15:13 GMT

திருப்பூர்

ஆஸ்திரேலியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் அமலானதால் 50 ஆயிரம் டன் பருத்தி இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் நூல் விலை சீராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

50 ஆயிரம் டன் பருத்தி

இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார வர்த்தக ஒப்பந்தம் கடந்த 29-ந் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே வரியில்லாமல் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் செய்யப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் இருந்து இந்த புத்தாண்டில் 50 ஆயிரம் டன் அளவுள்ள 3½ லட்சம் பேல் பஞ்சு இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

நூற்பாலைகளுக்கு மட்டும் மாதம் 25 லட்சம் பேல் அளவுக்கு பஞ்சு தேவைப்படும் நிலையில், முன்னுரிமை அடிப்படையில் ஆர்டர் கொடுத்தவர்களுக்கு வரியில்லாமல் பஞ்சு இறக்குமதி செய்ய முடியும். கடந்த ஆண்டு அபரிமிதமான பஞ்சு விலை உயர்வால் பருத்தி மார்க்கெட்டில் இன்னும் இயல்புநிலை திரும்பவில்லை.

இறக்குமதி வரி

தினமும் 2½ லட்சம் பேல் வரை விற்பனைக்கு வரும் நிலை மாறி, 1 லட்சத்து 20 ஆயிரம் பேல் மட்டுமே வந்து கொண்டிருந்தது. கடந்த வாரம் 1 கேண்டி பஞ்சு ரூ.56 ஆயிரமாக குறைந்தது. பஞ்சு வரத்து குறைந்ததால் 2 நாட்களில் பஞ்சு விலை ரூ.60 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

தற்போது நூல் கொள்முதலில் உள்நாட்டு பின்னலாடை நிறுவனங்கள் அதிகம் ஈடுபட்டுள்ளன. இந்த மாதத்துக்கான நூல் விலை வந்ததும் நூல் தேவை குறித்து முன்பதிவு செய்வார்கள். அந்த தேவையை பொறுத்து பஞ்சு கொள்முதலில் கவனம் செலுத்தப்படும் என்றும், பஞ்சுக்கான இறக்குமதி வரியை நீக்கினால் பஞ்சு விலை நியாயமான விலையில் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் நூற்பாலைகள் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக நூல் விலை சீராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

----

Tags:    

மேலும் செய்திகள்