5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக 5 ஆயிரம் மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க செல்லவில்லை.

Update: 2022-12-19 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக 5 ஆயிரம் மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க செல்லவில்லை.

கடல் சீற்றம்

வங்க கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வேதாரண்யம் பகுதியில் கடல் கடும் சீற்றமாக காணப்படுகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் இன்றுக்குள்(செவ்வாய்க்கிழமை) கரை திரும்ப வேண்டும். கரை திரும்பாத படகுகள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது.

மீன்பிடிக்க செல்லவில்லை

இந்த நிலையில் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை.

கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் தங்கள் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை கரையில் இருந்து சற்று தொலைவில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

கடற்கரை வெறிச்சோடியது

மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கேரளா, கர்நாடகா, ஆந்திராவிற்கும், வெளி மாவட்டங்களுக்கும் மீன்கள் அனுப்பும் பணி பாதிக்கப்பட்டது, இதனால் கடற்கரை பகுதி வெறிச்சோடி கிடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்