தமிழகத்திற்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும்: கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் அடுத்த 15 நாட்களுக்கு திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.;
புதுடெல்லி,
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, காவிரியில் இருந்து தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீரை விடுவிக்க வேண்டும் என்று கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.